கிள்ளான், 17 நவம்பர் (பெர்னாமா) -- ஜனநாயக செயல்கட்சியின் இளைஞர் அணி, DAPSY-இன் புதிய தலைமைத்துவம் பல்வேறு இனங்களைச் சேர்ந்த இளம் தலைவர்களின் கூட்டமைப்புடன் மலேசிய மடானியின் உணர்வைப் பிரதிபலிக்கின்றது.
இந்த நியமனம் நாட்டின் அரசியல் நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கான அடிப்படையான நல்லிணக்கத்தையும் ஒருமைப்பாட்டையும் வெளிப்படுத்துவதாக அக்கட்சியின் தேசிய உதவித் தலைவர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.
''இதுதான் மலேசிய மடானியின் உணர்வு. மலாய்க்காரர்களும் சீனர்களும் இந்தியர்களும் ஒன்றிணைந்தால் நம் நாடு மீண்டும் அதன் மாண்பை மீட்டெடுக்கும். இதுதான் புதிய அரசியல் உணர்வு, '' என்றார் அவர்.
இன்று சிலாங்கூர், கிள்ளானில் நடைபெற்ற DAPSY காங்கிரசில் உரையாற்றும் போது ஙா கோர் மிங் அவ்வாறு கூறினார்.
மேலும், இளம் தலைவர்கள் அனைவரும் களத்தில் இறங்கி அடித்தட்டு மக்களைக் குறிப்பாக இளைஞர்களை அணுகி அவர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு வாக்காளர்களுடன் நெருங்கிய உறவை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஙா கேட்டுக் கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)