லாபுவான், 23 நவம்பர் (பெர்னாமா) -- கடந்த 50 ஆண்டுகளாக எழுத்துத் துறையில் சேவையாற்றி வந்த சோஹன் தாஸ் எனும் 81 வயதான முன்னாள் நிருபர், இன்று TABUNG KASIH @ HAWANA நிதி உதவியைப் பெற்றார்.
மலேசிய தேசிய செய்தி நிறுவனம், பெர்னாமா பணிக்குழுவுடன் லாபுன், கெருப்பாங் சத்துவில் உள்ள அவரின் வீட்டிற்குச் சென்ற தொடர்பு அமைச்சின் துணைத் தலைமைச் செயலாளர் நிக் கமருஜமான் நிக் ஹுசின் அந்நிதி உதவியை வழங்கினார்.
எழுத்துத் துறையில் அவர் ஆற்றிய சேவை வளர்ந்து வரும் ஊடகவியலாளர்களுக்குப் பெரும் உத்வேகமாக இருக்கும் என்று நிக் கமருஜமான் தெரிவித்தார்.
பெர்னாமாவின் தலைமைச் செயல்முறை அதிகாரி நூர்-உல் அஃபிதா கமாலுடின், வர்த்தக துறைத் தலைவர் மஸ்துரா ஹாசன், அலுவல் விவகாரப் பிரிவுத் தலைவர் மரியாட்டி முகமட் ஆரிப், ஒளிபரப்பு விற்பனை பிரிவு மூத்த நிர்வாகி ஃபர்ஹான் முஸ்தபா கமல் மற்றும் லாபுவான் செய்தியாளர் ஜெய்லானி ஹசன் ஆகியோரும் சோஹன் தாஸைச் சந்தித்தனர்.
கடந்தாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டதில் இருந்து Tabung Kasih@HAWANA நிதி உதவியைப் பெறும் 196வது நபராக சோஹன் விளங்குகிறார்.
தற்போது உள்ளூர் நாளிதழான லாபுவான் டெய்லி எக்ஸ்பிரஸில் பணிபுரியும் சோஹன் தாம் பெற்ற இந்த உதவிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)