கோலாலம்பூர், 26 நவம்பர் (பெர்னாமா) - மலேசிய இசைத்துறை வளர்ச்சி ஆய்வான KPIMM, குறிப்பிடத்தக்க திட்டங்கள் வாயிலாக அத்துறையின் வளர்ச்சியை ஆதரிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் திறன் கொண்ட ஒரு புதிய துணைத் துறை என்றும் அவர் வர்ணித்தார்.
இசைத்துறையை வலுப்படுத்த பொருத்தமான செயல் திட்டங்களை முன்மொழிவதோடு சிக்கல்கள், சவால்கள் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு ஆகியவற்றை இன்னும் விரிவாக ஆராய்வதில் KPIMM பங்கு வகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பகுப்பாய்வு, ஒழுங்குமுறை கட்டமைப்புகள், கொள்கை, சட்ட அமைப்பு ஆகியவற்றுடன் உலகளவில் சிறந்த நிர்வாக நடைமுறைகளை தரப்படுத்தும் முயற்சியையும் உட்படுத்தியுள்ளதாக ஃபஹ்மி விவரித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)