BREAKING NEWS   Malaysia conveys deepest appreciation, welcomes flood aid from Pakistan in honour of friendship between both countries - PM Anwar | 
 பொது

இந்திய முஸ்லிம் சமூகத்தினருக்கு பூமிபுத்ரா அந்தஸ்து வழங்க வேண்டும்

30/11/2024 05:17 PM

ஜாலான் புத்ரா, 30 நவம்பர் (பெர்னாமா) -- அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ள சட்டங்கள் படி, மலேசியாவில் வசிக்கும் இந்திய முஸ்லிம் சமூகத்தினருக்கான சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.

குறிப்பாக பூமிபுத்ரா அந்தஸ்து வழங்கப்பட்டு இந்திய முஸ்லிம் சமூகத்திற்கான நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று மலேசிய இந்திய முஸ்லிம் காங்கிரஸ், கிம்மா தலைவர் டத்தோ ஶ்ரீ சைட் இப்ராஹிம் காதர் கேட்டுக் கொண்டார்.

இதன் மூலம், நாட்டில் உள்ள மற்ற இனத்தவர்கள் போல் இந்திய முஸ்லிம் மக்களும் சமநிலையிலான வாழ்க்கையை முறையை அனுபவிக்க முடியும் என்று அவர் கூறினார்.

இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசிய இந்திய முஸ்லிம் காங்கிரஸ்சின் 45ஆம் ஆண்டு பொதுக் கூட்டத்தில் உரையாற்றி பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் சைட் இப்ராஹிம் அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)