BREAKING NEWS | Malaysia conveys deepest appreciation, welcomes flood aid from Pakistan in honour of friendship between both countries - PM Anwar | |
கோலாலம்பூர், 30 நவம்பர் (பெர்னாமா) -- சபா மற்றும் சரவாக் உட்பட தீபகற்ப மலேசியாவின் சில மாநிலங்களில் இடியுடன் கூடிய தொடர் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய வானிலை ஆய்வு மையம், மெட் மலேசியா எச்சரித்துள்ளது.
கிளாந்தான் மற்றும் திரெங்கானுவின் பல பகுதிகளில் டிசம்பர் முதலாம் தேதி வரை தொடர் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிளாந்தானில் உள்ள தும்பாட், பாசிர் மாஸ், கோத்தா பாரு, ஜெலி, தானா மேரா, பச்சோக், மச்சாங், பாசிர் புதே, மற்றும் குவாலா க்ராய் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யும் என்று மெட் மலேசியா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
திரெங்கானுவில் பெசுட், செத்தியூ, குவாலா நெரஸ், ஹுலு திரெங்கானு, குவாலா திரெங்கானு, மற்றும் மாராங் போன்ற பகுதிகளும் கனமழையினால் பாதிக்கப்படும் என்று அம்மையம் கூறியது.
இதனிடையே, பேராக்கில் ஹுலு பேராக், கிளாந்தானில் குவா முசாங் மற்றும் திரெங்கானுவில் டுங்குன், கெமாமான் ஆகிய பகுதிகளில் தொடர் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
சரவாக்கில் பிந்துலு, மிரி, லிம்பாங், மற்றும் சிபு ஆகிய பகுதிகளுக்கும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
சபாவின் சிபித்தாங், குவாலா பென்யு, பியூஃபோர்ட், மற்றும், பாபார் மற்றும் குடாட் உட்படுத்திய மேற்குக் கடற்கரையும் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)