பொது

மலேசியாவின் வெளிநாட்டு கொள்கை மீதான மரியாதையை அமெரிக்கா மீண்டும் உறுதிப்படுத்தியது

01/11/2025 03:34 PM

கோலாலம்பூர், நவம்பர் 1 (பெர்னாமா) -- பிரிக்ஸ் குழுவில் சாத்தியமான பங்கேற்பு உட்பட, மலேசியா தனது சொந்த வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றுவதற்கான இறையாண்மை உரிமை மீதான தனது மரியாதையை அமெரிக்கா மீண்டும் உறுதிப்படுத்தியது.

பிரிக்ஸ் மூலம் வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவதில் மலேசியாவின் ஆர்வத்தை வாஷிங்டன் புரிந்துக் கொண்டிருப்பதாக மலேசியாவுக்கான அமெரிக்க தூதர் எட்கார்ட் டி. கேகன்தெரிவித்தார்.
மலேசியாவின் நீண்டகால வளம் மேற்கத்திய வழங்கல் சங்கிலிகளுடன் அதன் ஒருங்கிணைப்பில் ஆழமாக வேரூன்றியிருப்பதாகவும் அமெரிக்கா–மலேசியா பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் ஏ.ஆர்.தி மூலம் அது மேலும் வலுப்பெற்றுள்ளதாகவும் எட்கார்ட் டி. கேகன் எடுத்துரைத்தார்.

"சில சூழ்நிலைகளில், பிரிக்ஸ் மலேசியாவிற்கு சில வரையறுக்கப்பட்ட பொருளாதார நன்மைகளை வழங்கக்கூடும் என்பதால், மலேசியா அதைப் பார்ப்பது அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அதே நேரத்தில் மலேசியாவின் நீண்டகால செழிப்பு எங்கிருந்து வருகிறது என்பதை அங்கீகரிப்பது மிகவும் முக்கியம் என்றும் நான் நினைக்கிறேன். இது எங்கள் பார்வையில் மேற்கத்திய விநியோகச் சங்கிலிகளில் அதன் ஆழமான ஒருங்கிணைப்பிலிருந்து வருகிறது," என எட்கார்ட் டி. கேகன் கூறினார்.

மலேசியாவின் பிரிக்ஸ் உடனான தொடர்பை சுழியத் தொகை விளையாட்டாகக் காணக் கூடாது என்றும் மலேசியாஅமெரிக்கா மற்றும் பிரிக்ஸ் உடன் ஒரே நேரத்தில் தனது உறவுகளை வலுப்படுத்த முடியும் என்று பெர்னாமாவிடம் பேசிய கேகன் கூறினார்.

அண்மையில், அமெரிக்க அதிபர் டோனல் டிரம்ப்பின் மலேசிய பயணத்தைத் தொடர்ந்து, அமெரிக்கா-மலேசியா ஒத்துழைப்பு குறித்த சமீபத்திய தகவல்களையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

அப்பயணம், இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான அடிப்படை உறவின் பிரதிபலிப்பாகும் என்றும் கேகன் விவரித்தார்.

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)