சபா, 13 நவம்பர் (பெர்னாமா) -- செம்போர்னா மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் மாநிலத் தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாட்டு பணிகள் சீராகவும் நிர்ணயிக்கப்பட்ட அட்டவணையின்படியும் நடைபெற்று வருகின்றன.
மாநிலத் தேர்தல் சீராகவும் சுமூகமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக வாக்கு மையங்களை மதிப்பாய்வு செய்தல் ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் மற்றும் அவசரகால திட்டங்களைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட ஓர் அட்டவணையை அமலாக்கத் தரப்பினர் தயாரித்துள்ளதாக செம்போர்னா மாவட்ட அதிகாரி மாஸ் ஷஸ்வான் மசூட் தெரிவித்தார்.
''செம்போர்னா சட்டமன்றத்தைப் பொருத்தமட்டில் அனைத்து ஏற்பாடுகளையும் கருத்தில் கொள்ளும் வகையில் தொடக்கத்திலிருந்தே ஓர் அட்டவணையை நாங்கள் தயார் செய்து வருகிறோம். எனவே இன்று முதல் அதை நாங்கள் பின்பற்றுகிறோம். மேலும் எதிர்பாராத அனைத்து விஷயங்களையும் நாங்கள் கருத்தில் கொள்வோம்.'' என்றார் மாஸ் ஷஸ்வான் மசூட்.
இன்று தமது மாவட்ட அலுவலகத்தில் பெர்னாமா தொலைக்காட்சியைச் சந்தித்தபோது செம்போர்னாவில் உள்ள மூன்று இடங்களான சுலபாயன், செனல்லாங் மற்றும் புகயாவிற்கான வேட்பாளர்களின் வேட்புமனு தாக்கல் வரும் சனிக்கிழமை அரெனா சமூக மண்டபத்தில் நடைபெறும் என்றும் மாஸ் ஷஸ்வான கூறினார்.
பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)