பொது

முறையற்ற வணிகக் கூட்டமைப்பு கடத்தல் நடவடிக்கைகளைத் துடைத்தொழிப்பது அசாதாரண நடவடிக்கை

13/11/2025 06:44 PM

பாங்கி, 13 நவம்பர் (பெர்னாமா) -- முறையற்ற வணிகக் கூட்டமைப்பு மற்றும் கடத்தல் நடவடிக்கைகளை துடைத்தொழிக்கும் மடானி அரசாங்கத்தின் முயற்சிகள் நாட்டையும் மக்களையும் மீட்பதற்கான அசாதாரணமான மற்றும் ஆபத்தான நடவடிக்கை ஆகும்.

முறையற்ற வணிகக் கூட்டமைப்பு மற்றும் கடத்தல் நடவடிக்கைகள் என்பது புதிய விவகாரம் அல்ல.

ஆனால், அரசியல் முயற்சியும் உறுதிப்பாடும் இல்லாததால் அதனை தவிர்க்க இயலாமல் போனதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

''முறையற்ற வணிகக் கூட்டமைப்பு, குண்டர் கும்பல், கொள்ளை, கடத்தல் ஆகியவை இப்போது தான் நடக்கின்றனவா? இரண்டு வருடங்களா? இல்லை, பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கின்றன. சீரான செயல்திட்டம் மற்றும் உறுதிப்பாடும் இல்லாமல் கைவிடப்பட்டிருந்தன. இது எளிதானது அல்ல, எஸ்.ஈ.ஆர்.எம், எல்.எச்.டி.என், போலீஸ்க்குப் பெரிய சவால். இது அனைவருக்கும் ஆபத்து. ஏனெனில், இக்குற்றங்களைச் செய்பவர்கள் வலிமையானவர்கள். ஆகவே, எப்போதும் இறைவன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்,'' என்று டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் / பிரதமர்

வியாழக்கிழமை பாங்கியில் நடைபெற்ற 2025ஆம் அனைத்துலக உயர்கல்வி இஸ்லாமிய கல்வி மாநாட்டில் உரையாற்றும்போது பிரதமர் அதனைத் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)