பொது

பாஸ் கட்சி அரசியலமைப்பில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம்

13/09/2024 06:31 PM

ஜெராண்டுட், 13 செப்டம்பர் (பெர்னாமா) --  இஸ்லாம் அல்லாத ஆதரவாளர்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொள்வது தொடர்பில் பாஸ் கட்சியின் அரசியலமைப்பில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அக்கட்சியின் 70-வது பொதுப் பேரவையில் இவ்விவகாரம் குறித்து தாக்கல் செய்யப்படும் என்று அதன் தலைவர் டத்தோ ஹஷிம் ஜாசின் கூறினார்.

''அன்று அரசியலமைப்பில் பல திருத்தங்கள் செய்யப்பட்டன. ஆனால், அந்த கூட்டம் ஷூராவிற்கும் தினசரி வாரியத்திற்கும் இடையில் நடைபெற்றது. இஸ்லாமியர்களை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்டிருக்கும் பாஸ் கட்சியில் இஸ்லாம் அல்லாதவர்களும் சாதாரண உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்பது முதன்மையாகப் பேசப்பட்டது. அதனால்தான், கட்சியின் ஆதரவாளர் பேரவை DHPP-யைப் பயன்படுத்துகிறோம். இப்போது அதில் திருத்தம் செய்ய இருக்கிறது'', என்று அவர் கூறினார்.

இன்று, பகாங், ஜெராண்டுட்டில் நடைபெற்ற ஆண்டு பொது கூட்டத்தைத் தொடக்கி வைத்த பின்னர் அவர் அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)