பொது

மக்கோத்தா: ஒருமைப்பாட்டு கட்சிகளுக்கிடையிலான ஒத்துழைப்பு புலப்படும்

14/09/2024 06:53 PM

குளுவாங், 14 செப்டம்பர் (பெர்னாமா) --  ஒருமைப்பாட்டு அரசாங்கத்தில் உள்ள கட்சிகளுக்கிடையிலான நெருக்கமான ஒத்துழைப்பை மக்கோத்தா சட்டமன்ற இடைத்தேர்தல் மீண்டும் புலப்படுத்தும்.

இதற்கு முன்னர் நடைபெற்ற குவாலா குபு பாரு, சுங்கை பாகாப் மற்றும் நெங்கிரி இடைத்தேர்தல்களில் அக்கட்சிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு காணப்பட்டதாக, துணைப் பிரதமரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

''கோலா குபு பாருவில் நாங்கள் ஜ.செ.க-விற்கு உதவினோம். சுங்கை பாக்காப்பில் நாங்கள் கெஅடிலான் கட்சிக்கு உதவினோம். அண்மையில், நெங்கிரியில் அனைவரும் எங்களுக்கு உதவினர். இம்முறை தேசிய முன்னணி போட்டியிடுகிறது. ஆனால், ஒருமைப்பாட்டு அரசாங்கத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பை நல்கி ஹுசேன் இத்தொகுதியை வெற்றிக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்'', என்று அவர் கூறினார்.

இன்று, ஜோகூர், குளுவாங்கில் N29 மக்கோத்தா சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான ஒருமைப்பாட்டு நடவடிக்கை மையத்தைத் திறந்த வைத்தபோது டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)