பொது

தொழில்துறைகளின் தேவைகளுக்கு ஏற்ப தனது கொள்கைகளை சீரமைக்க மலேசியா தயார்

15/11/2024 04:55 PM

லிமா, 15 நவம்பர் (பெர்னாமா) -- அதிக மதிப்புள்ள முதலீடுகளைத் தொடர்ந்து ஈர்க்கும் பொருட்டு, பல்வேறு அணுகுமுறையின் மூலம் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வரும் தொழில்துறைகளின் தேவைகளுக்கு ஏற்ப, மலேசியா தனது கொள்கைகளை சீரமைக்க தயாராக உள்ளது.

தரவு மையங்களில் அதிக நீர் தேவை இருப்பதால், நீர் பாதுகாப்புக் கொள்கைகளை விரிவாக மறு மதிப்பீடு செய்வது குறித்து மலேசியா ஆலோசித்து வருவதை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் சுட்டிக் காட்டினார்.

''இந்த தரவு மையங்களால் இப்போது நீருக்கான அதிக தேவையை நாங்கள் எதிர்நோக்கியது இல்லை. அதைக் கொண்டு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவர்கள் அதிக நீர், அதிக ஆற்றலைக் கேட்கிறார்கள்,'' என்றார் அவர்.

வியாழக்கிழமை, லிமா, பெருவில் நடைபெற்ற 'செயற்கை நுண்ணறிவுப் புரட்சியின் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் குறித்த கலந்துரையாடலில் பிரதமர் அவ்வாறு கூறினார்.

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் பாடத்திட்டத்தை மாற்றுவது உட்பட திறன்களை மேம்படுத்துவது, மறு பயிற்சி மற்றும் அனுபவங்களை வழங்குவது ஆகிய அம்சங்களில் தேவை இருப்பதாக அன்வார் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)