ஈப்போ, 15 நவம்பர் (பெர்னாமா) -- கடந்த வாரம், பேராக், ஈப்போ, தாமான் புத்ரி லிண்டுங்கான் பிந்தாங்கில் உள்ள வீடொன்றில் தமது உறவுக்கார பெண்ணை கொலை செய்ததாக, வேலையில்லா ஆடவர் ஒருவர் இன்று ஈப்போ மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
தமக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அதனை புரிந்துகொண்டதாக 21 வயதுடைய லீ ஹாவ் யி தலையசைத்தார்.
எனினும், கொலை வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்திற்குட்பட்டு இருப்பதால் அவரிடமிருந்து எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.
கடந்த நவம்பர் ஆறாம் தேதி அதிகாலை மணி ஒன்றிலிருந்து நவம்பர் பத்தாம் தேதி காலை மணி 8.25-க்குள் 54 வயதான லீ ஹூய் டிஙை கொலை செய்ததாக அவ்வாடர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டம் செக்ஷன் 302-இன் கீழ் இவ்வழக்கு பதிவாகியுள்ளது.
இவ்வழக்கின் மறுசெவிமடுப்பை அடுத்தாண்டு பிப்ரவரி 18-ஆம் தேதிக்கு Majistret Siti Nora Sharif நிர்ணயித்தார்.
தாமான் புத்ரி லிண்டுங்கான் பிந்தாஙில் உள்ள வீடொன்றில் துர்நாற்றம் வீசிய நிலையில் கிடந்த பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பெண்ணின் உறவுக்காரரான 21 வயதுடைய ஆடவரை போலீஸ் கைது செய்ததாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)