ரியோ டி ஜெனிரோ, 18 நவம்பர் (பெர்னாமா) -- அடுத்தாண்டு கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் 47ஆவது ஆசியான் உச்சநிலை மாநாடு மற்றும் அது தொடர்பான அமர்வுகளில் கலந்து கொள்வதற்குத் தாம் விடுத்த அழைப்பைப் பிரேசில் அதிபர்லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா ஏற்றுக் கொண்டதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
பிரேசில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் G20 உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்வதற்குத் தமக்கு அழைப்பு விடுத்திருந்த பிரேசில் அதிபருக்குத் தமது நன்றியையும் அன்வார் தெரிவித்துக் கொண்டார்.
தென் அமெரிக்காவின் மிகப்பெரிய நாடான பெருவிற்குத் தனது முதல் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்ளும் அன்வார் கடந்த சனிக்கிழமை லிமாவிற்குச் சென்றிருந்திருந்தார்.
மலேசியாவுடன் சில்லி, கட்டார், எகிப்து, சிங்கப்பூர், ஸ்பெயின், ஐக்கிய அரபு சிற்றரசு மற்றும் வியட்நாம் உள்ளிட்ட 16 நாடுகள் G20 உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்டுள்ளன.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)