புத்ராஜெயா, 21 நவம்பர் (பெர்னாமா) -- மலேசியாவிற்கு வியட்நாமிற்கும் நிலையான மேம்பாட்டை உறுதிசெய்ய Grid Tenaga ஆசியானைப் பயன்படுத்திக் கொள்வது உட்பட தற்காப்பு, எரிசக்தி மற்றும் கடல்சார் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த அவ்விரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.
மேலும், இந்நடவடிக்கை நெருக்கமான மற்றும் முழுமையான ஒத்துழைப்பின் வழி விரிவான பங்காளித்துவத்தை நோக்கிய முயற்சியாகும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் கூறினார்.
"நாங்கள் எங்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளோம். எனவே நீங்கள் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும், ஆசியான் எரிசக்தி கிரிட்டைப் பயன்படுத்தி ஆற்றலையும் பார்த்தது போல் தற்காப்பு, கடல்சார் ஆகிய அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பை மேற்கொள்வதை உறுதி செய்வோம். வியட்நாமில் எங்கள் வணிக முயற்சிகளுக்கு வியட்நாம் மிகவும் ஆதரவாக உள்ளது. இது இப்போது 700 திட்டங்களுடன் ஆயிரத்து 300 கோடி அமெரிக்க டாலரை தாண்டியுள்ளது", என்று அவர் கூறினார்.
இன்று, புத்ராஜெயாவில் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு பொது செயலாளர் டு லாமின் மலேசியாவிற்கான அதிகாரப்பூர்வப் பயணத்தை முன்னிட்டு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் டத்தோ ஶ்ரீ அன்வார் அவ்வாறு குறிப்பிட்டார்.
அச்செய்தியாளர்கள் சந்திப்பின்போது இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
வர்த்தக விளம்பரத்தை வலுப்படுத்த Matrade-கும் Vietrade-கும் இடையிலும் பெட்ரோனாஸ் மற்றும் பெட்ரோவியட்நாமிற்கு இடையிலான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஒத்துழைப்புமே அந்த ஒப்பந்தங்களாகும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)