பொது

ஆறு மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

27/11/2024 07:13 PM

கோலாலம்பூர், 27 நவம்பர் (பெர்னாமா) -- இன்று புதன்கிழமை மாலை ஆறு மணி நிலவரப்படி, கிளந்தான், திரெங்கானு, ஜோகூர், பேராக், பெர்லிஸ், கெடா ஆகிய ஆறு மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 19,375 ஆக அதிகரித்துள்ளது.

5,798 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் 192 தற்காலிக நிவாரண மையங்கள் PPS- இல் தங்க வைக்கப்படுள்ளனர்.

கிளந்தானின் 17 ஆயிரத்திற்கும் அதிகமானோரும், திரெங்கானுவில் 2,307 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, ஜோகூரில் 28 பேரும், பேராக்கில் 20 பேர், சரவாக்கில் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)