விளையாட்டு

உலகின் சிறந்த திடல்தட வீரர் வீராங்கனையாக தெபோக சிஃபான் தேர்வு

02/12/2024 07:05 PM

பார்சேலோனா, 02 டிசம்பர் (பெர்னாமா) -- இவ்வாண்டு, உலகின் சிறந்த திடல்தட வீரராக, பார்சேலோனா, போட்ஸ்வானாவின் அதிவேக ஓட்டக்காரர், லெட்சைல் டெபோகோவும் சிறந்த வீராங்கனையாக, நெதர்லாந்தின் தூர ஓட்டக்காரர் சிஃபான் ஹாசன்னும் தேர்வாகி உள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை, மொனாக்கோவில் நடைபெற்ற இந்த ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர் விருதளிப்பு விழாவில், அவ்விருவரும் ரசிகர்களால் தேர்வு செய்யப்பட்டனர்.

பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் போட்ஸ்வானாவிலிருந்து முதல் ஒலிம்பிக் வெற்றியாளரான லெட்சைல் டெபோகோ, ஆடவருக்கான 200 மீட்டரில் 19.46 வினாடிகளில் ஓடி ஆப்பிரிக்க சாதனையை முறியடித்தார்.

21 வயதான அவர் ஆடவருக்கான அஞ்சல் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றபோது புதிய ஆப்பிரிக்க சாதனையைப் படைத்தார்.

இதனிடையே, நெதர்லாந்தின் நெடுந்தூர ஓட்டப்பந்தய வீராங்னையான சிஃபான் ஹாசன் பிரான்ஸ்சில் நடந்த உலக மராத்தான் பட்டத்தை வென்றதன் மூலம் ஆண்டின் சிறந்த உலக பெண் திடல்தட வீரருக்கான விருதைப் பெற்றார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)