விளையாட்டு

லாகூரில் மறுசீரமைக்கப்பட்ட கடாஃபி அரங்கம் திறக்கப்பட்டது

08/02/2025 05:56 PM

லாகூர், 08 பிப்ரவரி (பெர்னாமா) -- ICC வெற்றியாளர் கிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு, லாகூரில் மறுசீரமைக்கப்பட்ட கடாஃபி அரங்கத்தை பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷரீஃப் நேற்று திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், பஞ்சாப் முதலமைச்சர் மரியம் நவாஸ், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி, மற்றும் பிற அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இருக்கை வசதிகள் மற்றும் விருந்தோம்பல் பெட்டிகளை மேம்படுத்துதல், LED விளக்குகளைப் பொருத்துதல் உள்ளிட்ட மறுசீரமைப்புப் பணிகள் 117 நாட்களில் நிறைவடைந்தன.

பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் பங்கேற்கும் ஒரு சிறிய முத்தரப்பு தொடர் போட்டி தொடங்குவதற்கு ஒரு நாளுக்கு முன்னதாக இந்த தொடக்க விழா நடைபெற்றது.

இதேபோன்ற திறப்பு விழா, பிப்ரவரி 11-ஆம் தேதி, கராச்சியில் உள்ள தேசிய அரங்கத்திலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எட்டு அணிகள் பங்கேற்கும் 50 ஓவர்கள் கொண்ட இப்போட்டி, 28 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் நடைபெறும் முதல் அனைத்துலகப் போட்டியாகும்.

இருப்பினும், அரசியல் பதற்றங்கள் காரணமாக பாகிஸ்தானுக்கு பயணம் செய்ய மறுத்ததால், துபாயில் நடைபெறும் அனைத்து போட்டிகளிலும் இந்தியா பங்கேற்கும்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)