பொது

மக்கள் மத்தியில் மனநலனிற்கு எதிரான களங்கம், பாகுபாடு பெரிய சவாலாக மாறி வருகிறது

19/02/2025 07:35 PM

சிலாங்கூர், 19 பிப்ரவரி (பெர்னாமா) -- மக்கள் மத்தியில் மனநலத்திற்கு எதிரான களங்கம் மற்றும் பாகுபாடு தற்போது அதிகரித்து வரும் ஒரு பெரிய சவாலாக மாறி வருகிறது.

இது மக்கள் மத்தியில் கவனிக்கப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட் தெரிவித்தார்.

மக்கள் தங்களின் எதிர்மறையான கண்ணோட்டத்தை மாற்றுவதற்கு கற்றுக் கொடுக்க, சுகாதார அமைச்சு இன்று "War On Stigma" என்ற பிரச்சாரத்தை தொடக்கி உள்ளது.

மனநலப் பராமரிப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதற்கான முயற்சியாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மனநலப் பிரச்சினைகள் உள்ள மேலும் அதிகமான மக்கள் நிபுணர்களின் உதவியை நாடி முன்வரும் வகையில் இக்கண்ணோட்டம் உடனடியாக மாற்றப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த களங்கம் மற்றும் பாகுபாடே, மனநோயாளிகள் சிகிச்சை பெற மறுக்கவோ அல்லது தாமதப்படுத்தவோ காரணமாகிறது என்று டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட் விவரித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)