விளையாட்டு

கத்தார் டென்னிஸ் போட்டி; இறுதி சுற்றில் ரூபலவ்- டிரப்பர்

22/02/2025 07:25 PM

டோஹா, 22 பிப்ரவரி (பெர்னாமா) -- கத்தார் பொது டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் எண்ரூ ரூபலவும் பிரிட்டனின் ஜேக் டிரப்பரும் மோதவுள்ளனர்.

நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டங்களில் அவ்விருவரும் தங்களின் எதிராளிகளை வெற்றிகரமாக தோற்கடித்து, இறுதி ஆட்டத்தில் கால் வைத்தனர்.

2020-ஆம் ஆண்டு டோஹா பொது டென்னிஸ் பட்டத்தைக் கைப்பற்றிய எண்ரூ ரூபலவ் அரையிறுதி ஆட்டத்தில் கனடாவின் ஃபெலிக்ஸ் அகோர் உடன் களம் கண்டார்.

அதில், முதல் செட்டில் 7-5 வெற்றி பெற்ற எண்ரூ ரூபலவ், பின்னர் 4-6 என்று இரண்டாம் செட்டில் வீழ்ந்தார்.

மூன்றாம் செட்டை வெற்றிக்கொள்வதில் இரு ஆட்டக்கார்களும் கடுமையாக போரடிய வேளையில், 7-5 என்று ஆட்டம் எண்ரூ ரூபலவுக்கு சாதகமாக முடிந்தது.

இதனிடையே, காலிறுதியில் மெத்தியோ பெரடென்னியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய டிரப்பர் அதே உத்வேகத்துடன் அறையிறுதியில் செக் குடியரசின் ஜிரி லெஹக்கா எதிர்கொண்டார்.

அதில், 3-6 என முதல் செட்டை கைவிட்ட டிரப்பர் பின்னர் 7-6, 6-3 என்று தொடர்ந்து இரண்டாம் மூன்றாம் செட்களை கைப்பற்றி இறுதி ஆட்டத்திற்கு தேர்வானார்.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)