கோலாலம்பூர், 27 பிப்ரவரி (பெர்னாமா) -- நாட்டின் ஆடவர் இரட்டையர் பூப்பந்து ஆட்டக்கார்களான ஸ்சே ஃபெய் - நூர் இசுட்டின் ரும்சானி உடன் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா யோ சந்திப்பு நடத்தினார்.
Road to Gold (RTG) திட்டத்தின் கீழ், தங்கம் வெல்லும் இலக்கை முன் வைத்து இந்த சந்திப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்தத் திட்டத்தில் பன்கேற்க முன்னதாக இதர விளையாட்டார்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருந்த நிலையில், அவ்விருவருக்குமான வாய்ப்பு இதுவரை அவர்களுக்கு கொடுக்கப்படவில்லை என்று ஹன்னா தெரிவித்தார்.
அவ்விருவரும் கடந்த ஆகஸ்ட் மாதம் மலேசியப் பூப்பந்து சங்கத்தை விட்டு வெளியேறியதிலிருந்து, இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளின் பொது பூப்பந்து போட்டிகளில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தி உள்ளனர்.
அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில், RTG திட்டத்தின் கீழ், போட்டிகளுக்கு ஆதரவு, கூடுதல் பயிற்சி மற்றும் மாத அலவன்ஸ் போன்றவை வழங்கப்படு தொடர்பில் அதில் கலந்தாலோசிக்கப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)