உலகம்

டிரம்பின் அதிரடி மாற்றங்கள் மக்கள் பெறக்கூடிய நன்மைகளை பாதிக்கிறது - பைடன் சாடல்

16/04/2025 05:31 PM

சிகாகோ, 16 ஏப்ரல் (பெர்னாமா) --   அரசாங்கத் துறை சார்ந்த விவகாரங்களில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அவசரமாக மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் மக்கள் பெறக்கூடிய நன்மைகளைப் பாதிப்பதாக அதன் முன்னாள் அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

சமூகப் பாதுகாப்புத் துறையில் பணியாற்றும் 7,000 ஊழியர்களை வேலை நிறுத்தம் செய்திருக்கும் டிரம்பின் நடவடிக்கையையும் அவர் சாடியிருக்கிறார்.

"100 நாட்களுக்குள், இந்தப் புதிய நிர்வாகம் பெரிய சேதத்தையும், பெரிய அழிவையும் ஏற்படுத்தியுள்ளது. இது விரைவில் ஏற்பட்டிருப்பது ஒருவிதத்தில் வியப்படைய வைக்கிறது. சமூகப் பாதுகாப்பு நிர்வாகத்தின் 7,000 ஊழியர்களை வேலையிலிருந்து அவர்கள் (டிரம்ப் நிர்வாகம்) நீக்கியிருக்கிறார்கள்", என்று அவர் கூறினார்.

முறையான திட்டமிடல் இல்லாமல் டிரம்ப் நிர்வாகம் மேற்கொள்ளும் அதிரடி நடவடிக்கைகள் அரசாங்க ஊழியர்கள் பெறக்கூடிய ஓய்வுக்கால சலுகைகளைப் பாதிக்கக்கூடும் என்று பைடன் சுட்டிக்காட்டினார்.

தமது ஆட்சி காலம் முடிந்த பிறகு முதன்முறையாக ஆற்றிய உரையில் பைடன், டிரம்பின் நிர்வாகத்தை விமர்சித்துள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)