உலகம்

சிங்கப்பூரில் மே 3-ஆம் தேதி பொதுத் தேர்தல்

16/04/2025 05:38 PM

சிங்கப்பூர், 16 ஏப்ரல் (பெர்னாமா) --   14-வது பொதுத் தேர்தலுக்கு வழி விடும் வகையில் சிங்கப்பூர் நாடாளுமன்றம் நேற்று கலைக்கப்பட்டது.

ஏப்ரல் 23-ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் நடைபெறும் நிலையில், பொதுத் தேர்தல் மே 3-ஆம் தேதி நடத்தப்படும் என்று பிரதமர் அலுவலகம் ஓர் அறிக்கை ஒன்றின் வழி அறிவித்துள்ளது.

பிரதமர் லாரன்ஸ் வோங் அலோசனையின் அடிப்படையில், அதிபர் தர்மன் சண்முக ரத்னம் நாடாளுமன்றத்தைக் கலைத்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

97 நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தல் நடத்தப்படவிருக்கிறது.

இத்தேர்தலில், சிங்கப்பூரின் 27 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் வாக்களிப்பர் என்று கணிக்கப்பட்டுள்ளது.

உலகம் பெரிய மாற்றங்களைச் சந்தித்து வரும் ஒரு முக்கியமான காலகட்டத்தில் நாட்டை வழிநடத்தும் பிரதிநிதிகளைச் சிங்கப்பூர் மக்கள் தேர்ந்தெடுக்கவுள்ளதாக லாரன்ஸ் வோங் தெரிவித்திருக்கிறார்.

பிரதமராக பொறுப்பேற்ற பிறகு லாரன்ஸ் வோங் சந்திக்கவிருக்கும் முதல் தேர்தல் இதுவாகும்.

கடந்த ஆண்டு மே மாதம் சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக வோங் பொறுப்பேற்றார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)