தோக்கியோ, 17 ஏப்ரல் (பெர்னாமா) -- ஜப்பான் மீதான அனைத்து வரிகளையும் மறுபரிசீலனை செய்யுமாறு, ஜப்பான் அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளது.
வரி தொடர்பான இருதரப்பு பேச்சுவார்த்தையின் முதல் சுற்றில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நேரடியாக கலந்து கொண்டதை தொடர்ந்து, அமெரிக்காவை மறுபரிசீலனை செய்ய ஜப்பான் கேட்டுக் கொண்டுள்ளது.
ஜப்பான் மீதான கூடுதல் வரிகள் குறித்து மேலும் விவாதிக்க டிரம்ப் இணக்கம் தெரிவித்திருப்பதாக ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபா தெரிவித்தார்.
"இது (வரிக் கொள்கை) எளிதான பயணமாக இருக்காது. ஆனால் ஜப்பானுடனான பேச்சுவார்த்தைகள் தனது முதன்மையான முன்னுரிமை என்று அதிபர் டிரம்ப் கூறியிருக்கிறார். நாங்கள் நடத்திய பேச்சுவார்த்தைகள் எங்களை அடுத்த கட்டத்திற்கு இட்டுச் செல்லும் என்று நான் நம்புகிறேன்", என்று அவர் கூறினார்.
இந்த மாத இறுதிக்குள் இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.
அமைச்சர்கள் நிலையிலான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து கண்காணிக்கவிருப்பதாகவும், உரிய நேரத்தித்தில் டிரம்பை சந்திக்க தாம் வாஷிங்டனுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் இஷிபா தெரிவித்தார்.
அமெரிக்காவின் பரஸ்பர வரிகளினால், ஜப்பானின் தொழில்துறை குறிப்பாக அந்நாட்டின் மிகப்பெரிய ஏற்றுமதிப் பொருளான வாகன உற்பத்தி தொழில்துறை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு அமெரிக்காவிற்கு 21 லட்சம் கோடி யென் மதிப்புள்ள பொருள்களை ஜப்பான் ஏற்றுமதி செய்தது.
இதில் வாகன உற்பத்தி தொழில்துறை சுமார் 28 விழுக்காடு கொண்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)