உலகம்

காசாவில் மனிதாபிமான உதவிகள் நுழைவதற்கு தொடர்ந்து தடை 

17/04/2025 07:29 PM

ரமல்லஹ், 17 ஏப்ரல் (பெர்னாமா) -- இஸ்ரேலிய அதிகாரிகள் காசாவில் மனிதாபிமான உதவி விநியோகத்தை தொடர்ந்து தடுத்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை ஐ.நா கூறியதை WAFA எனப்படும் பாலஸ்தீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுமார் இரண்டு மாதங்களாக காசாவில் எல்லைக்குள் மனிதாபிமான உதவிகள் நுழையவில்லை என்றும் அவை தடையின்றி விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டிய அவசியத்தையும் ஐ.நாவின் துணை பொதுச் செயலாளரின் செய்தி தொடர்பாளர் ஸ்டெஃபனி ட்ரெம்ப்ளே கூறினார்.

மனிதாபிமான உதவிகளை செய்யும் பணியாளர்கள் தங்களது கடமைகளைச் செய்வதில் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

நேற்று திட்டமிடப்பட்ட ஆறு உதவி நடவடிக்கைகளில் இரண்டை மட்டுமே மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கட்டுப்பாடுகளால் மருத்துவமனைகளுக்கு மருந்துகளை வழங்கும் செயல்முறைகளும் பாதிக்கப்படும் நிலையில், நோயாளிகளும் ஆபத்தைச் சந்திக்கின்றனர் என்று ஐ.நா கூறுகின்றது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)