பொது

இஸ்ரேல் இராணுவத்தின் நடவடிக்கைக்கு பிரதமர் கடும் கண்டனம் 

02/10/2025 04:07 PM

கோலாலம்பூர், 02 அக்டோபர் (பெர்னாமா) - காசாவுக்கு மனிதாபிமான உதவிகளை கொண்டு சென்ற GLOBAL SUMUD FLOTILLA, GSF பயணக் கப்பல்களை இடைமறித்திருக்கும் இஸ்ரேல் இராணுவத்தின் நடவடிக்கையை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

உயிர்காக்கும் முக்கிய பொருள்களை ஏற்றிச் செல்லும் Flotila, இஸ்ரேலிய இராணுவத்தின் அச்சுறுத்தல்களையும் வற்புறுத்தலையும் எதிர்கொள்வதாக அவர் கூறினார்.

மனிதாபிமானப் பணிகளைத் தடுத்து வரும் இஸ்ரேல், பாலஸ்தீன மக்களின் உரிமைகளை மட்டுமில்லாமல் உலக மக்கள் அனைவரையும் அவமதித்து வருவதாக, இன்று தமது முகநூலில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.

மலேசிய சட்டப்படி அனைத்து வழிமுறைகளையும் பயன்படுத்தி குறிப்பாக GSFஇல் ஈடுபட்டுள்ள மலேசியர்களின் பாதுகாப்பிற்கு இஸ்ரேல் பொறுப்பேற்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், இவ்விவகாரம் குறித்து வட சுமத்ரா கட்டுப்பாட்டு மையத்தின் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் சானி அரபி அப்துல் அலிம் அரபியுடன் பேசிய பிரதமர் அண்மைய நிலவரங்களை கேட்டறிந்தார்.

காசாவுக்கு மனிதாபிமான உதவிகளை கொண்டு சென்ற 10 GSF கப்பல்களில் 23 மலேசியர்கள் பயணித்தனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)