பொது

போலீஸ் படையில் பல்வேறு இனங்களின் ஈடுபாட்டை உறுதிசெய்ய தீவிர முயற்சி

10/10/2025 02:47 PM

கோலாலம்பூர், 10 அக்டோபர் (பெர்னாமா) -- போலீஸ் படையில் பல்வேறு இனங்களின் ஈடுபாட்டை உறுதிசெய்ய தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவற்றில், நாட்டில் உள்ள 20 பல்கலைக்கழகங்களில் மாணவர் போலீஸ் தன்னார்வலர்கள், SUKSIS திட்டத்தை செயல்படுத்துவது உட்பட பல்கலைக்கழக அளவில் தேர்வு நடத்துவதும் அடங்கும் என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.

''நாடு முழுவதும் 20 பல்கலைக்கழகங்களில் SUKSIS திட்டம் உள்ளது. அதிலிருந்து ஏற்றுக்கொள்வதற்கு தகுந்த திறமையானவர்களை நாங்கள் காண முடிகிறது. இதன்வழி, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் எதிர்காலத்தில் குற்றங்களுக்கு ஏற்ற மாற்றங்களுக்கு தகுந்தபடி பி.டி.ஆர்.எம்-இன் கடமைகளை செயல்படுத்துவது இருக்கும்,'' என்றார் அவர்.

பாதுகாப்புப் படை உட்பட மக்களின் நலனுக்கான உறுதிப்பாடு குறித்து அரசாங்கத்திற்கு முஹமட் காலிட் தமது பாராட்டுகளையும் தெரிவித்தார்.

அதோடு, ஊதிய சீரமைப்பு, தொழில்நுட்பம், தளவாடங்கள், ஊழியர்கள் வீட்டுவசதி மற்றும் பணிக்கான பிற தேவைகளில் மேம்பாடு அடிப்படையில் அரசாங்க ஊழியர்களாக, போலீஸ்படை பல சலுகைகளைப் பெற்றுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)