பொது

அக்.18 முதல் நான்காம் கட்ட ரஹ்மா உதவித் தொகை வழங்கப்படும்

10/10/2025 07:23 PM

ஜாலான் பார்லிமன், 10 அக்டோபர் (பெர்னாமா) --   இவ்வாண்டு தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு நான்காம் கட்ட ரஹ்மா உதவித் தொகை, எஸ்.டி.ஆர் வரும் அக்டோபர் 18-ஆம் தேதி தொடங்கி வழங்கப்படும்.

அதோடு, ​​தீபாவளியை முன்னிட்டு இரண்டு நாள்களுக்கு 50 விழுக்காடு டோல் கட்டண கழிவையும் வழங்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.

''தீபாவளியை முன்னிட்டு சகோத சகோதரிகளே, தீபாவளி நல்வாழ்த்துகள். 200 கோடி ரிங்கிட் மதிப்பிலான 2025-ஆம் ஆண்டின் நான்காம் கட்ட எஸ்.டி.ஆர் உதவித் தொகை வரும் அக்டோபர் 18-ஆம் தேதி முதல் வழங்கப்படும்'', என்றார் அவர்.

இவ்வாண்டின் இறுதி கட்ட எஸ்.டி.ஆர் தொகை, முன்னதாக நவம்பர் மாதம் வழங்க திட்டமிடப்பட்டிருந்தது.

எஸ்.டி.ஆர் மற்றும் சாரா திட்டங்களுக்குச் சுமார் 1,300 கோடி ரிங்கிட்டை அரசாங்கம் ஒதுக்கி இருப்பதால், மொத்தம் 90 லட்சம் பேர் பயனடைவார்கள் என்றும் அன்வார் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)