பொது

கோலாலம்பூரில் பாரம்பரிய கட்டிடங்களின் பராமரிப்பிற்காக 60 கோடி ரிங்கிட் முதலீடு; அன்வார் ஆதரவு

15/10/2025 05:43 PM

புத்ராஜெயா, 15 அக்டோபர் (பெர்னாமா) -- வரலாறு மற்றும் தேசிய அடையாளத்தின் முக்கிய சின்னமாக கருதப்படும் கர்கோசா ஶ்ரீ நெகாரா உட்பட கோலாலம்பூரில் உள்ள பாரம்பரிய கட்டிடங்களின் பராமரிப்பிற்காக 60 கோடி ரிங்கிட் முதலீடு செய்வதற்கான கசானா நேஷனல் நிறுவனத்தின் முடிவை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தற்காத்துள்ளார்.

அத்திட்டம், பழையக் கட்டிடங்களை பராமரிக்கும் முயற்சி மட்டுமல்ல,.

மாறாக, மலாய் ஆட்சியாளர்களின் பாரம்பரியத்தை வலுப்படுத்தவும் சுதந்திர அடையாளங்களை நிலைநிறுத்தும் நடவடிக்கையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

''கார்கோசா குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இப்பிரச்சனையை சில நேரங்களில் எதிர்க்கட்சியினர் படிப்பதில்லை. மேம்பாட்டிற்கான இந்த 60 கோடி ரிங்கிட் கார்கோசாவின் ஒரு கட்டிடத்திற்கு மட்டுமல்ல. கார்சோசா ஶ்ரீ நெகாரா 2 ஆகும். இது பாரம்பரியம். நான் எனது வரலாற்றில் பெருமை கொள்கிறேன். கோலாலம்பூரை திறந்தது உட்பட மலாய் ஆட்சியாளர்களின் பாரம்பரியமான சுல்தான் அப்துல் சமாட் கட்டிடத்தின் பங்களிப்பு குறித்தும் நான் பெருமிதம் கொள்கிறேன்,'' என்றார் அன்வார்.

புத்ராஜெயாவில், நிதி அமைச்சின் மாதாந்திரக் கூட்டத்தில் உரையாற்றும்போது அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

அந்த பராமரிப்பு முயற்சிகள் கசானாவால் மேற்கொள்ளப்பட்டாலும், சம்பந்தப்பட்ட நகரத்திற்கான வணிக, முதலீடு மற்றும் அழகு கூறுகளை அரசாங்கம் இன்னும் கண்காணித்து வருவதாக அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)