விளையாட்டு

சிலிக்கோன் வெலி: இறுதி சுற்றில் எஸ். சிவசங்கரி

15/10/2025 06:29 PM

ரெட்வூட் சிட், 15 அக்டோபர் (பெர்னாமா) -- அமெரிக்கா, ரெட்வூட் சிட்டியில் நடைபெற்ற சிலிக்கோன் வெலி பொது ஸ்குவாஷ் போட்டியின் இறுதி சுற்றுக்கு, தேசிய ஸ்குவாஷ் வீராங்கனை எஸ்.சிவசங்கரி முன்னேறினார்.

இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், எகிப்தின் சல்மா ஹெனியை 3-0 என்ற நிலையில் வீழ்த்தி உலகின் எட்டாம் நிலை ஆட்டக்காரரான சிவசங்கரி அடுத்து சுற்றில் கால் பதித்தார்.

இப்போட்டியின் மூன்றாவது தரவரிசையில் இருக்கும் சிவசங்கரி தமது அபார ஆட்டத்திறனை வெளிப்படுத்திய அதேவேளையில், நிதானத்துடனும் விளையாடினார்.

இந்த ஆட்டம் 22 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது.

இவ்வாட்டத்தில், 11-3, 11-9, 11-5 என்ற புள்ளிகளில் வெற்றி பெற்ற அவர், இறுதி சுற்றில் அமெரிக்காவின் ஒலிவியா வேவரை சந்திக்கவுள்ளார்.

முன்னதாக, எட்டு ஆட்டங்களில் வேவரை சந்தித்த சிவசங்கரி ஏழில் தோல்விக் கண்ட நிலையில், இந்த இறுதி சுற்றில் பெரும் சவாலை எதிர்நோக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மற்றோர் அரையிறுதி சுற்றில் இங்கிலாந்தின் ஜார்ஜினா கென்னடியை 1-5, 11-3, 11-4 என்ற புள்ளிகளில் வீழ்த்தி, வேவர் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)