கோலாலம்பூர், 26 அக்டோபர் (பெர்னாமா) -- நிலைத்தன்மையற்ற உலகளாவிய சூழலை எதிர்கொள்வதில், ஒற்றுமையை நிலைநிறுத்தவும், தேவைகளுக்கான தன்மையையும், பொதுநல மனப்பாங்கையும் மேம்படுத்தவும், ஆசியான் உறுப்பு நாடுகளுக்கு வலியுறுத்தப்படுகின்றன.
இவ்வாண்டு ஆசியானின் தலைமைத்துவ பொறுப்பை ஏற்றிருக்கும் மலேசியா, வட்டாரத்தை வழிநடத்தும் அதேவேளையில், விரைந்து வளர்ச்சி காணும் உலகத்தின் தூரநோக்கு சிந்தனைக்கு ஏற்ப வழிநடத்தக்கூடிய முக்கிய பொறுப்பினையும் ஏற்றுள்ளதாக....
47-வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் தொடக்க உரையாற்றுகையில், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
"மலேசியா ஆசியான் தலைமையை ஏற்றுக்கொண்டபோது, எங்களுக்கு முன் இருந்த பொறுப்பின் நிலைத்தன்மையை நாங்கள் நிச்சயமாக உணர்ந்திருந்தோம். தலைமைத்துவம் என்பது ஒருபோதும் வழக்கமான ஒன்றல்ல, அது ஒரு தேர்வு சார்ந்த விஷயம். முன்னுரிமைகளை வரையறுத்தல், ஆசியானின் நோக்க உணர்வைப் புதுப்பித்தல் மற்றும் நமது மக்களின் நம்பிக்கைகளுக்கு தகுதியான ஒரு பாதையை வகுக்க வேண்டும். 2025 என்பது நம்மிடம் அதிகம் கேட்கும் மற்றும் கோரும் ஆண்டாகும்," என்றார் அவர்.
இதனிடையே, ஆசியானின் பலம் என்பது அதன் பன்முகத்தன்மை, மரியாதை மற்றும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பிலும் உள்ளதாக கூறிய அன்வார், அது ஆசியானை தொடர்ந்து ஒருமித்த உணர்வுடன் இணைப்பதாகவும் கோடிகாட்டினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)