பொது

டோனல்ட் டிரம்பிடம் காசா பிரச்சனைக்கு ஒரு விரிவான தீர்வு வலியுறுத்தப்பட்டது

30/10/2025 02:28 PM

ஜாலான் பார்லிமன், 30 அக்டோபர் (பெர்னாமா) -- 47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டின் போது காசா பிரச்சனைக்கு ஒரு விரிவான தீர்வைத் தொடர்ந்து வலியுறுத்துவதற்காக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்புடன் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் மலேசியா பயன்படுத்திக் கொண்டது.

டிரப்புடன் அதிகாரப்பூர்வமாகவோ அல்லது தனிப்பட்ட வழியில் நடத்தப்பட்ட  ஒவ்வொரு சந்திப்பும் காசாவில் நிலவும்  பிரச்சினைகளை விவாதிக்க முழுமையாகப் பயன்படுத்தப்பட்டதாக டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் விவரித்தார்.

"ஆசியான் - அமெரிக்கா நான் அதையே வலியுறுத்துகிறேன். எனவே நாம் நமது பங்கைப் பயன்படுத்திக் கொண்டோம். அதிபர்  டோனல்ட் டிரம்பை எதிர்கொண்டு உறுதியாகத் தெரிவிக்கும் பல நாடுகள் உள்ளனவா என்று எனக்குத் தெரியவில்லை. நாங்கள் அதைச் செய்தோம்," என்று டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

காசா மோதலுக்கான உண்மையான தீர்வு விரிவானதாக இருக்க வேண்டும் என்றும், காசா மற்றும் பாலஸ்தீன மக்களின் இறையாண்மை உரிமைகளை அங்கீகரிக்காமல் வெறும் போர்நிறுத்தமாக இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்துவதற்காகவும் விரிவான தீர்வு என்ற வார்த்தையை தாம் பயன்படுத்தியதாக அவர் கூறினார்.

47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டின் போது ​காசா மற்றும் வர்த்தக பிரச்சனைகள் தொடர்பாக டிரம்புடனான பிரதமரின் சந்திப்பின் பலன்கள் குறித்து புலாய் நாடாளுமன்ற உறுப்பினர் சுஹைசான் கயாட் எழுப்பிய கேள்விக்கும் அன்வார் பதிலளித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)