லெம்பா பந்தாய், 3 நவம்பர் (பெர்னாமா) -- சிறந்த மற்றும் பயனுள்ள அரசாங்க அமைப்பை உருவாக்கும், குறிப்பாக கொள்கைகளை செயல்படுத்துவதில் நாடு 'சிறந்த திட்டமிடல்' கலாச்சாரத்தில் இருந்து 'சிறந்த நடைமுறை' கலாச்சாரத்திற்கு மாற வேண்டும்.
இதில் மூன்று முக்கிய மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டுள்ள 'செயல்பாட்டு மனநிலை' முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று உயர்கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சம்ரி அப்துல் காடிர் கூறினார்.
ஒவ்வொரு முக்கியக் கொள்கைக்கும் முக்கிய நிபுணர்கள் கொண்ட செயல்பாட்டு குழு இருக்க வேண்டும் என்றும் அது அளவிடக்கூடிய விளைவுகள், காலக்கெடு, அளவு, அறிக்கை மற்றும் கற்றல் செயல்முறைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் டாக்டர் சம்ரி கூறினார்.
இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற 2025 பொதுக் கொள்கை மற்றும் தலைமைத்துவம் குறித்த அனைத்துலக மாநாட்டின் தொடக்க விழா உரையில் அவர் அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)