ஷா ஆலம், 08 நவம்பர் (பெர்னாமா) -- அமைச்சரவையில் மாற்றம் ஏற்படலாம் என்ற ஆருடங்கள் எழுந்துள்ள நிலையில், அதனை சீரமைக்கும் பொறுப்பை கொண்டுள்ள பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் உரிமையை அமானா கட்சி மதிப்பதாக அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் சாபு தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டால், அதற்கு தமது கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை பரிந்துரைக்க கட்சி விரும்பவில்லை என்று அவர் கூறினார்.
மாறாக, இந்த விவகாரத்தில் முடிவெடுக்கும் உரிமையை பிரதமரிடம் ஒப்படைத்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
''இந்த அமைச்சரவை பிரதமரின் உரிமை. இதை நாங்கள் சிறப்புரிமை என்று அழைக்கிறோம். அவர் அரசியல்வாதிகள், நிபுணர்கள் அல்லது கட்சிக்குள் அல்லது கட்சிக்கு வெளியே உள்ளவர்களை நியமிக்கலாம். அது பிரதமரின் முடிவு.அடுத்த தேர்தலை எதிர்கொள்ள நமது அணியை நாம் கவனித்துப் பலப்படுத்த வேண்டும்,'' என்றார் அவர்.
மேலும், இது குறித்து பிரதமரிடம் இதுவரை எந்தவொரு பேச்சுவார்த்தையும் மேற்கொள்ளப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)