இக்குவாடோர், 11 நவம்பர் (பெர்னாமா) -- தென்மேற்கு இக்குவாடோரில் உள்ள ஒரு சிறைச்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வன்முறை கலவரத்தில் குறைந்தது 31 கைதிகள் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் சிறைச்சாலைகள் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
துறைமுக நகரமான மச்சாலாவில் 27 கைதிகள் மூச்சுத்திணறல் மற்றும் தூக்கிலிடப்பட்டதால் உடனடி மரணம் ஏற்பட்டதாலும் உயிரிழந்ததாக SNAI சிறைச்சாலைகள் நிறுவனம் தனது X பதிவில் தெரிவித்துள்ளது.
கைதிகள் எவ்வாறு உயிரிழந்தனர் என்பது குறித்து இதர விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை அதே சிறைச்சாலையில் ஏற்பட்ட் மற்றொரு சம்பவத்தில் நால்வர் உயிரிழந்ததாக SNAI கூறியுள்ளது.
எனினும், இக்கலவரத்தை போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
புதிய அதிகபட்ச பாதுகாப்பு வசதியின் கீழ் கைதிகள் மறுசீரமைக்கப்பட்டதால் அக்கலவரம் ஏற்பட்டதாக அப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்குவாடோரில் அண்மைய ஆண்டுகளில் ஏற்பட்டு வரும் மோசமான தொடர் சிறைக் கலவரங்களினால் நூற்றுக்கணக்கான கைதிகள் உயிரிழந்துள்ளனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)