உலகம்

நிலச்சரிவால் ஜாவா தீவில் 21 பேரைக் காணவில்லை

14/11/2025 05:37 PM

இந்தோனேசியா, 14 நவம்பர் (பெர்னாமா) -- இந்தோனேசியா ஜாவா தீவில் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் இருவர் உயிரிழந்ததோடு 21 பேர் காணாமல் போனதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

காணாமல் போன அந்த 21 பேரை மீட்புப் படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் உள்ள மூன்று கிராமங்களில் வியாழக்கிழமை மாலை ஏற்பட்ட நிலச்சரிவால் பல வீடுகள் சேதமடைந்ததாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிலைமை சீராக இல்லாததால் பாதிக்கப்பட்டவர்களைத் தேடுவதில் தேடல் மற்றும் மீட்புப் படையினர் பெரும் சவால்களை எதிர்நோக்கி வந்தனர்.

எனினும், இன்று காலை தேடும் பணி தொடரப்பட்டதாக அதே அறிக்கையில் தேசிய பேரிடர் நிர்வகிப்பு நிறுவனத்தின் பேச்சாளர் அப்துல் முஹாரி தெரிவித்தார்.

தேடல் நடவடிக்கையை விரைவுபடுத்த கனரக வாகனங்களும் பயன்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

17,000 தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில் லட்சக்கணக்கான மக்கள் வசிக்கும் மலைப்பகுதிகளிலோ அல்லது வெள்ளப்பெருக்கு அபாயமுடைய சமவெளிகளிலோ அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை பெய்யும் பருவகால மழையால் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவுகளும் ஏற்படுவது வழக்கமாகும்.
 
பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)