உலகம்

குழந்தைகள் விளையாட்டு மணலில் அஸ்பெஸ்டாஸ்; 70-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டன

17/11/2025 04:31 PM

ஆஸ்திரேலியா, 14 நவம்பர் (பெர்னாமா) -- ஆஸ்திரேலியாவில் பெருமளவு பயன்படுத்தப்படும் குழந்தைகள் விளையாட்டு மணலில் அஸ்பெஸ்டாஸ் கண்டறியப்பட்டதையடுத்து அதனை துப்புரவு செய்யும் பணிகளுக்காக இன்று 70-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டன.

ஆய்வக பரிசோதனையில் தெர்மொலிர் மற்றும் கிரிசொலிட் கல்நார் தடயங்கள் கண்டறியப்பட்டதால் வண்ணமயமான விளையாட்டு மணல் தயாரிப்புகளைத் திரும்பப் பெறுவதற்கான உத்தரவுகளும் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த புதன்கிழமை கல்வி பொருட்களை விநியோகிக்கும் ‘Educational Colours’ நிறுவன தயாரிப்புகளைத் திரும்பப் பெறுவதாக ஆஸ்திரேலிய போட்டி மற்றும் பயனீட்டாளர் ஆணையம் ACCC அறிவிப்பு வெளியிட்டது.

அதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய தலைநகராட்சி A-C-T மற்றும் பிரிஸ்பேன்னில் உள்ள சில பள்ளிகளும் பாலர் பள்ளிகளும் மூடப்பட்டன.

இதனிடையே, நியூசிலாந்திலும் குழந்தைகளின் விளையாட்டு மணலில் Asbestos எனப்படும் கல்நார்  கனிமம் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டில் குறைந்தது ஐந்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

கல்நார் தடயங்கள் ஆய்வகப் பரிசோதனையில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து பல வண்ணமயமான விளையாட்டு மணல் தயாரிப்புகளைத் திரும்பப் பெறுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

திரும்பப் பெறுவதற்கு உத்தரவிடப்பட்ட கேமார்ட் தயாரிப்பிலான மணல் தயாரிப்புகளில் ஒன்றைப் பயன்படுத்தியிருக்கலாம் என்ற அச்சத்தில் 120-க்கும் மேற்பட்ட பள்ளிகளும் அரசாங்கத்தைத் தொடர்பு கொண்டுள்ளன.

கல்நார் , நியூசிலாந்தில் தடை செய்யப்பட்ட பொருளாகும்.

அதன் நார்களை சுவாசித்தாலோ அல்லது உட்கொண்டாலோ பல வகையான புற்றுநோய்களை ஏற்படுத்தக்கூடும்.

பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)