அமெரிக்கா, 21 நவம்பர் (பெர்னாமா) -- அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், பெண் நிருபர் ஒருவரை பன்றிக்குட்டி என்று திட்டியச் செயலுக்கு அந்நாட்டின் ஊடகவியலாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறனர்.
அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ விமானத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவில் மறைந்த பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் குறித்து கேள்வி எழுப்பிய அந்த பெண் நிருபரை டிரம்ப் பன்றிக்குட்டி என்று திட்டினர்.
''அமைதியாக இரு... அமைதியாக இரு பன்றிக்குட்டி'', என்றார் அவர்.
இருப்பினும், டிரம்ப்பின் அச்செயலை வெள்ளை மாளிகை தற்காத்துள்ளது.
அதிபரின் கருத்துக்கள் வெளிப்படைத்தன்மையையும் பிரதிபலிப்பதாக வெள்ளை மாளிகையின் பத்திரிக்கை செயலாளர் கேரலைன் லெவெட் கூறியுள்ளார்.
''நீங்கள் அவரைப் பற்றிப் பொய் சொல்லும்போது, அவரைப் பற்றியும் அவரது நிர்வாகத்தைப் பற்றியும் போலிச் செய்திகளைப் பரப்பும்போது, அவர் பத்திரிகையாளர்களிடம் விரக்தியடைகிறார். ஆனால் அவர் வரலாற்றில் மிகவும் வெளிப்படையான அதிபரும் கூட. மேலும், நீங்கள் அனைவரும் அறிந்தபடி, இந்த அறையில் உங்கள் அனைவருக்கும் அணுகலை வழங்குகிறார்'', என்றார் அவர்.
கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் அவர் கொண்டிருக்கும் வெளிப்படைத்தன்மையை நிருபர்கள் பாராட்ட வேண்டும் என்று கேரலைன் லெவெட் தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)