விளையாட்டு

லா லீகா; பார்சா தொடர்து முன்னிலை

03/12/2025 05:36 PM

பார்சிலோனா, 3 டிசம்பர் (பெர்னாமா) -- ஸ்பெயின் லா லீகா கிண்ணம்...

இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில், பார்சிலோனா 3-1 எனும் கோல்களில் எட்லெதிகோ மெட்ரிட்டை வீழ்த்தியது.

இதன் வழி, 37 புள்ளிகளோடு அது பட்டியலில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

முதல் பாதி ஆட்டத்தில் முதல் கோல் அடித்து எட்லெதிகோ மெட்ரிட் முன்னிலையில் இருந்தாலும், அடுத்த அதன் முயற்சிகளை பார்சிலோனா தடுத்து நிறுத்தியது.

அதே முதல் பாதியில் தனது முதல் கோலைப் போட்ட பார்சா, எஞ்சிய இரு கோல்களை, இரண்டாம் பாதியில் அடித்து தனது வெற்றியை உறுதி செய்தது.

லா லீகாவில் பார்சா தொடர் வெற்றியைப் பதிவு செய்து வரும் வேளையில், நான்கு புள்ளிகள் இடைவெளியில், இரண்டாம் இடத்தில் இருக்கும் ரியல் மெட்ரிட், முதல் இடத்தைக் குறி வைத்து பார்சிலோனை விரட்டிக்கொண்டு வருகிறது.

இதனிடையே, இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண காற்பந்து போட்டியில், இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில், மென்செஸ்டர் சிட்டி 5-4 எனும் கோல்களில் ஆர்சனலை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில், சிட்டியின் எலிர்ங் ஹாலன் தமது 100-வது கோலை அடித்து, சாதனைப் படைத்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)