பாலிக் புலாவ், டிசம்பர் 04 (பெர்னாமா) -- கடந்த ஆகஸ்ட் மாதம் தமது மனைவியைக் கொலை செய்ய முயற்சித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை ஆசிரியர் ஒருவர் இன்று பினாங்கு பாலிக் புலாவ் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மறுத்திருக்கின்றார்.
நீதிபதி அஹ்சன் ஃபரித் முஹமட் கைருதீன் முன்னிலையில் அக்குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டப் பின்னர் 30 வயதுடைய முஹமட் நஸ்மி இசுதீன் முஹமட் சுபைரி அவ்வாறு கூறினர்.
கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி அதிகாலை மணி 5.45க்குச் சுங்கை ஆரா, தாமான் துனாஸ் மூடாவில் அவரது வீட்டில் தமது மனைவியான 28 வயதுடைய ஹனிஸ் சோஃபியா ஹம்தானைக் கொலை செய்ய முயற்சித்ததாக முஹமட் நஸ்மி இசுதீன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
15,000 ரிங்கிட் ஜாமின் தொகை மற்றும் தனிநபர் ஒருவரின் உத்தரவாதத்தின் பேரில் அவரை விடுவிக்க நீதிமன்றம் அனுமதியளித்தது.
இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு அடுத்தாண்டு ஜனவரி ஆறாம் தேதி நிர்ணயிக்கப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)