பொது

RANCAKKAN MADANI BERSAMA MALAYSIAKU: 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வருகை

07/12/2025 05:50 PM

புத்ராஜெயா, டிசம்பர் 07 (பெர்னாமா) -- சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான வருகையாளர்களைப் பதிவுச் செய்து RANCAKKAN MADANI BERSAMA MALAYSIAKU நிகழ்ச்சி மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றது.

கடந்த மூன்று ஆண்டுகளில் மடானி அரசாங்கம் மேற்கொண்ட சாதனைகளை மக்கள் மதிப்பிடுவதற்கும், அரசாங்கம் வழங்கிய சேவை வழி பயன் பெறுவதற்கும், இந்நிகழ்ச்சி செயல்படுத்தப்பட்டதாக, டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

"நாட்டின் வரலாற்றில் மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டது குறுகிய காலம் அல்ல. இந்நிகழ்ச்சியை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு நான், இரண்டு துணைப் பிரதமர்கள், அமைச்சர்கள், அரசாங்க ஊழியர்கள், நாட்டின் நற்பெயரை ஒரு சிறந்த மற்றும் வெற்றிகரமாக உயர்த்தியுள்ள மக்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்றார் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் / பிரதமர்

கடந்த மூன்று ஆண்டுகளில் இனம் மதம் வேறுபாடின்றி பல்வேறு இனத்தைச் சேர்ந்த மக்கள் பயனளிக்கும் வகையிலான பல்வேறு முயற்சிகளை தமது தலைமையிலான மடானி அரசாங்கம் செயல்படுத்தியதை நிதி அமைச்சருமான அன்வார் சுட்டிக்காட்டினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)