கோலாலம்பூர், டிசம்பர் 08 ( பெர்னாமா) -- அண்மையில் ஹுலு திரெங்கானுவில் எஸ்.யூ.வி ரக வாகனம் விபத்துக்குள்ளான இடத்தில் எச்சரிக்கை பலகை மற்றும் கான்கிரீட் தடுப்புகளை அகற்றிய தரப்பினர் குறித்து தகவல் தெரிந்த பொதுமக்கள் விசாரணைக்கு உதவ முன்வருமாறு பொதுப்பணி அமைச்சு KKR கேட்டுக் கொண்டுள்ளது.
சம்பந்தப்பட்ட பகுதி மூடப்பட்டு நிலையான செயல்பாட்டுத் தர விதிமுறை S-O-P-ஐ பின்பற்றி பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டிருப்பதால் பொறுப்பற்ற தரப்பினர்களின் செயல்களை அமைச்சு தீவிரமாக கருதுவதாக பொதுப்பணி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கிகூறினார்.
''எனவே அது மாற்றப்பட்டதாகக் கூறப்பட்டால், அதை யார் மாற்றினார்கள் என்பதை நாம் அறிந்து கொள்வது முக்கியம். கே.கே.ஆர் அதை கண்டிப்பாக மாற்றவில்லை. நாங்கள் விசாரணையைத் தொடர்கிறோம். சாதாரணமானது. ஒரு சம்பவம் நடக்கும்போது, நாங்கள் அந்த இடத்திற்குச் செல்கிறோம். அது நிர்வாகம் மற்றும் எஸ்.ஓ.பி-இன் படி. யாருக்காவது தெரிந்தால் எங்களிடம் தெரிவிக்கவும்''.என்றார் டத்தோ ஶ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்க
கடந்த வெள்ளிக்கிழமை ஹுலு திரெங்கானுவில் இருந்து குவா மூசாங் நோக்கி எஸ்.யூ.வி ரக வாகனத்தில் புதிய திருமணமான தம்பதியர் ஜெனெரிஸ்-சுங்காய் காவி-அரிங் சாலையின் 52-வது கிலோமீட்டரில் உள்ள ஓர் ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து உயிரிழந்தனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)