பொது

ஒவ்வொரு செலவினமும் மக்களுக்கு பலனாக இருப்பதை உறுதி செய்வதே பிரதமரின் நோக்கம்

08/12/2025 04:17 PM

புத்ராஜெயா, டிசம்பர் 08 ( பெர்னாமா) -- ஒவ்வொரு அமைச்சும் திட்டமிடலை வலுப்படுத்துவதோடு கட்டமைக்கப்பட்ட திட்ட செயலாக்கத்தை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியிருக்கும் அறிவுறுத்தலும் பரிந்துரையும் அரசாங்க நிர்வாகத்தின் செயல்திறனை வலுப்படுத்துவதில் ஒரு நேர்மறையான உந்துதலாகக் கருதப்படுகின்றது.

பிரதமரின் இத்தகைய நினைவூட்டலை வரவேற்பதாகக் கூறிய தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு செலவினமும், நாட்டு மக்களுக்கு சிறந்த பலனாக இருப்பதை உறுதி செய்வதே அதன் நோக்கம் என்றும் தெரிவித்தார்.

சாலைகள், பாலங்கள், இணைய சேவைகள் போன்ற உள்கட்டமைப்பு உட்பட ஒவ்வொரு திட்டமும் KPI இலக்குகளை அடைவது மட்டுமின்றி உள்நாட்டு மக்கள் மீதான அதன் தாக்கத்தின் அடிப்படையிலும் மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்றும் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் கேட்டுக் கொண்டார்.

''அது குறித்த நடவடிக்கைகளை திட்டமிடுவதிலும் கண்காணிப்பதிலும் கால நீட்டிப்பு, கூடுதல் வேலை நேரம் போன்ற பிரச்சனைகள் பெரும்பாலும் எழுகின்றன. எனவே, இந்த இரண்டு விவகாரங்களும் நோக்கம் மற்றும் கண்காணிப்பில் முக்கியமானதாக கருதப்படுகிறது.'' என்றர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில். 

பிரதமர் கலந்து கொண்ட பொதுப்பணி அமைச்சின் மாதாந்திர கூட்டத்தில் இயங்கலை வழியான சந்திப்பில் அவர் அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)