கோலாலம்பூர், டிசம்பர் 08 ( பெர்னாமா) -- இவ்வாண்டு ஜனவரி தொடங்கி நவம்பர் வரை இணையக் குற்றங்களை உட்படுத்தி 67,735 வழக்குகள் பதிவான நிலையில் அதனால் 270 கோடி ரிங்கிட் இழப்பும் ஏற்பட்டுள்ளது.
தொலை தொடர்பு சார்ந்த குற்றங்கள் மிக அதிகமாக அதாவது 28,698 வழக்குகள் பதிவான வேளையில் அதனை அடுத்து மின்னியல் வர்த்தகத்தை உட்படுத்தி 14,881 வழக்குகள் பதிவாகியதாக புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வு துறை வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
9,296 வழக்குகளுடன் இல்லாத முதலீட்டு திட்டங்களினால் ஏற்பட்ட இழப்பும் அதிகம் என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
8,029 இல்லாத கடனுதவி திட்டங்கள் 5,853 மின்னியல் நிதி குற்றச்செயல்கள் மற்றும் 978 காதல் மோசடி குற்றங்களும் இதில் அடங்கும்.
இந்நிலையில் இல்லாத முதலீட்டு திட்டங்களினாலேயே மிக அதிகமான அதாவது 137 கோடி ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மைய புள்ளிவிவரங்கள் அபாயகரமான இணையத்தள குற்றச்செயல்களின் அளவை காட்டும் நிலையில் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளைத் தடுக்க பொதுமக்கள் விழிப்புணர்வோடு இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)