புத்ராஜெயா, நவம்பர் 09 (பெர்னாமா) -- மழலையர் காப்பகங்களுக்கான Program Ziarah Kasih Madani திட்டம் என்பது உள்துறை அமைச்சின் முனைப்புகளில் ஒன்றாகும்.
இத்திட்டமானது அங்குள்ள மழலையர்களுக்கான பாரிமரிப்பு உகந்த நிலையில் இருப்பதுடன் உள்துறை அமைச்சின் துறைகளில் பணிபுரியும் பெற்றோர்களுக்கு ஆதரவாக இருக்கும் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
பாதுகாப்பான, ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் குழந்தைகளின் பராமரிப்பு வசதிகளை உறுதி செய்வதற்கான முயற்சிகளை வலுப்படுத்துவதோடு, இத்திட்டம் தொழிலாளர்களின் நல்வாழ்வையும் ஆதரிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
''இங்குள்ள குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலையில் மகிழ்ச்சியான மற்றும் சுத்தமான ஓர் இடம். தேசிய பதிவுத் துறைக்கும் நடத்துனர்களுக்கும் வாழ்த்துகள். தகுந்த சூழ்நிலையில் தங்களின் குழந்தைகளை இங்கே விட்டு பணிக்குச் செல்லும் பெற்றோருக்கு மன அமைதியைத் தரும் என்று நம்புகிறேன்,'' என்றார் அவர்.
இன்று, புத்ராஜெயாவில் உள்ள தேசிய பதிவுத்துறையைச் சார்ந்த Warisan De' Qaseh மடானி குழந்தைகள் பராமரிப்பு மையத்திற்கு வருகை தந்தபோது சைஃபுடின் நசுத்தியோன் அவ்வாறு கூறினார்.
இது அதிகாரபூர்வ வருகை மட்டுமல்ல.
மாறாக, பிள்ளைகளப் பராமரிப்பதில் தமது அமைச்சில் பணியாற்றுவர்கள் மீது கொண்டிருக்கும் அக்கறையின் வெளிப்பாடாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)