கோலாலம்பூர், நவம்பர் 09 (பெர்னாமா) -- பொதுப்பணி அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்பட்டும் திட்டங்களில் மூன்று விழுக்காடு மட்டுமே தாமதமாகவும், பிரச்சனைகளை எதிர்நோக்கக்கூடிய திட்டங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு திட்டமும் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகள் மற்றும் அட்டவணைப்படி நிறைவு செய்யப்படுவதை உறுதிசெய்ய, அமைச்சு தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலெக்சண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.
தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து திட்டங்களின் முழு அடைவு நிலையையும் இந்த புள்ளிவிவரங்கள் பிரதிபலிக்கவில்லை என்றும், பல திட்டங்கள் திட்டமிட்டபடி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அலெக்சண்டர் நந்தா லிங்கி விவரித்தார்.
''ஆனால், மூன்று விழுக்காடு சிறியதாக இருந்தாலும், நாங்கள் கவனம் செலுத்துகிறோம், அதனால்தான் அதைக் கண்காணிக்கவும், விதிகளின்படி தகுந்த நடவடிக்கை எடுக்கவும் அமைச்சின் தலைமைச் செயலாளர் ஒரு சிறப்புக் குழுவை உருவாக்கியுள்ளார்,'' என்றார் அவர்.
இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர், நந்தா லிங்கி அவ்வாறு கூறினார்.
ஊராட்சி அதிகாரிகள், மாநில அரசாங்கங்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள் போன்ற பல்வேறு நிலைகளை உள்ளடக்கி சில திட்டங்களில் தாமதங்கள் ஏற்படுவதாக அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)