கோலாலம்பூர், டிசம்பர் 10 ( பெர்னாமா) -- அமலாக்கத்தை வலுப்படுத்தவும் ஓட்டுநர்களிடையே விதிமுறைகளைக் கடைப்பிடிக்கும் பழக்கம் மேம்படுத்தப்படுவதை உறுதிசெய்யவும் கனரக வாகன ஓட்டுநர்களின் தரவுத்தளத்தை உருவாக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது.
நிர்வகிப்பு நிறுவனங்களை நிர்ணயிப்பதற்கு முன்னர் ஓட்டுநர்களின் பின்னணி உட்பட தகவல்களை அந்தத் தளம் ஏற்படுத்தும் என்று போக்குவரத்து துணை அமைச்சர் டத்தோ ஹஸ்பி ஹபிபொல்லா தெரிவித்தார்.
நிர்வகிப்பு நிறுவனங்கள் தரமான ஓட்டுநர்களை நியமிப்பதையும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதையும் உறுதி செய்வதற்கான ஒரு முயற்சியாக இத்தளம் உள்ளதாகவும் டத்தோ ஹஸ்பி ஹபிபொல்லா கூறினார்.
''இது நிகழ்நேர இலக்கவியல் சோதனைகள் மூலம், நடவடிக்கையின் போது கனரக வாகன ஓட்டுநர்கள் விதிகளை மீறும் அபாயத்தைக் குறைக்கலாம். மேலும், நேரடி கண்காணிப்பை நம்பியிருப்பதைக் குறைக்கும் அதே வேளையில் அமலாக்கத்தையும் மிகவும் துல்லியமாகக் காணலாம்.'' என்றார் டத்தோ ஹஸ்பி ஹபிபொல்லா.
அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டிற்கு பதிலாக போக்குவரத்து தொடர்பான சட்ட அமலாக்கத்தில் மனித வளங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து செனட்டர் டத்தோ சலேஹுடின் சைடின் எழுப்பியக் கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)