கோலாலம்பூர், 10 டிசம்பர் (பெர்னாமா) -- நாடு தழுவிய அளவில், சுகாதாரப் பணியாளர்களின் பணியமர்வு அமலாக்கத்தை மேம்படுத்துவதற்காக சுகாதார அமைச்சு விரிவான ஆய்வை மேற்கொள்ளவிருக்கிறது.
சுகாதாரப் பணியாளர்களின் பணியமர்வு அமலாக்கத்தின் விளைவுகளை மதிப்பாய்வு செய்து, எதிர்காலத்தில் செயல்படுத்தப்படுவதற்கான சாத்தியத்தையும் மதிப்பிடு செய்யும் நோக்கத்தை அந்த ஆய்வு கொண்டுள்ள சுகாதார அமைச்சு அறிக்கையொன்றில் தெரிவித்தது.
அரசாங்கத் தலைமைச் செயலாளர், தான் ஶ்ரீ ஷாம்சுல் அஸ்ரி அபு பாக்கார்-இன் கூற்றுக்கு இணங்க, சேவையை ஒருமுகப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, அதிகத் தேவையுள்ள பகுதிகளில் மருத்துவ அதிகாரிகள் மற்றும் போலீஸ் பணியாளர்களை பணியமர்த்துவதன் மூலம், அரசாங்கம் பொது சேவை வழங்கல் அமைப்பை தொடர்ந்து வலுப்படுத்தும் என்றும் சுகாதார அமைச்சு கூறியது.
கடந்த டிசம்பர் 7-ஆம் தேதி நடைபெற்ற பொது சேவை சீர்திருத்தத்திற்கான தேசிய மாநாட்டில், தலைமையகம் மற்றும் சுகாதார வளாகங்களில், பணியமர்த்தல் நடவடிக்கையில், 380 மருத்துவ அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் தான் ஶ்ரீ ஷாம்சுல் அஸ்ரி தெரிவித்தார்.
மருத்துவ அதிகாரி திட்டத்தைத் தவிர, சுகாதார அமைச்சின் தலைமையகம் முதல் சுகாதார வளாகங்கள் வரை தாதியர்கள் மற்றும் உதவி மருத்துவ அதிகாரிகளுக்கான பணியமர்வும் உட்படுத்தப்பட்டுள்ளது.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)