பாங்காக், 10 டிசம்பர் (பெர்னாமா) - தென்கிழக்காசியாவின் மிகவும் மதிப்புமிக்க விளையாட்டான, 2025 சீ விளையாட்டு போட்டி, நேற்று தாய்லாந்தில் அதிகாரபூர்வமாக தொடங்கியது.
பேங்காக்கின் ராஜமங்கலா தேசிய விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்ற தொடக்க விழாவில், 'First Green Flame' எனும் சீ போட்டிக்கான தீபம் ஏற்றப்பட்டதை அடுத்து, அது ஒற்றுமையின் குறியீடாக மாறியது.
தொடக்க விழா 'Back to the Origin' என்ற நிகழ்வுடன் ஆரம்பமானது.
தாய்லாந்து மன்னர் ராஜா மஹா வாஜிராலொங்கோர்ன், ‘First Green Flame'-ஐ ஏற்றி விழாவை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
800 ஆளில்லா விமானங்கள் வானில் எழுந்து, 2025-ஆம் ஆண்டு தாய்லாந்து சீ விளையாட்டு போட்டியின் சின்னத்தை ஒளிரச் செய்தது கவரும் காட்சியாக இருந்தது.
ஈராண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த சீ விளையாட்டுப் போட்டியில் ஆசியானின் 11 நாடுகள் பங்கேற்கும் வேளையில்...
ஆசியான் மற்றும் உலக நாடுகளில் இருந்து சுமார் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் அதில் கலந்து கொண்டனர்.
இந்த வாரம் முதல் சில விளையாட்டு போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில், மலேசியா மொத்தம் 200 பதக்கங்களுக்கு இலக்கு நிர்ணயித்துள்ளது.
--பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)