பொது

டிசம்பர் 23-இல் சைன் ராயன் தாயாரின் தண்டனையை ஒத்தி வைப்பதற்கான விண்ணப்ப முடிவு

10/12/2025 06:23 PM

ஷா ஆலம், 10 டிசம்பர் (பெர்னாமா) -- சைன் ராயன் அப்துல் மாதினின் தாயாரின் தண்டனையை ஒத்தி வைப்பதற்கான விண்ணப்ப முடிவை வழங்க ஷா ஆலம் உயர் நீதிமன்றம் டிசம்பர் 23-ஆம் தேதியை நிர்ணயித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், தமது மகனுக்கு உடல் அளவில் காயம் ஏற்படும் அளவிற்கு அலட்சியப் போக்குடன் நடந்து கொண்ட காரணத்திற்காக 30 வயதுடைய இஸ்மாரினா அப்துல் மனாவ்-பிற்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட தண்டனையை ஒத்தி வைக்க நீதிமன்றத்திற்கு சிறப்புத் தேவை ஏதும் இல்லாததாக அரசு தரப்பு துணை வழக்கறிஞர் ராஜா சாய்சூல் ஃபாரிடா ராஜா ஸஹாருடினின் வாதத்தை செவிமடுத்தப் பின்னர், நீதிபதி டத்தோ அஸ்லாம் ஸாய்னுட்டின் அந்தத் தீர்ப்பை வழங்கினார்.

தண்டனையை ஒத்தி வைக்கக் கோரிய மேல்முறையீட்டாளரின் விண்ணப்பத்தை நிராகரிப்பதில் பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி தவறு செய்ததற்கான ஆதாரங்களை இஸ்மானிரா தரப்பு காட்டவில்லை என்ற வாதத்தை ராஜா சாய்சூல் ஃபாரிடா முன்வைத்தார்.

சைன் ராயனை புறக்கணித்ததற்காக தனக்கு விதிக்கப்பட்ட ஐந்து ஆண்டு சிறைத்தண்டனையை ஒத்தி வைக்க  இஸ்மானிரா கடந்த நவம்பர் 19ஆம் தேதி விண்ணப்பம் செய்திருந்தார்.

--பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)