பொது

இந்திய சமூகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு மித்ரா நேரடியாகப் பொறுப்பேற்கும்

10/12/2025 07:51 PM

ஜாலான் பார்லிமன், 10 டிசம்பர் (பெர்னாமா) --  இந்திய உருமாற்றுப் பிரிவு-மித்ரா, வியூக தலையீட்டு அணுகுமுறை மூலம் இந்திய சமூகத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு நேரடியாகப் பொறுப்பேற்கும் நிறுவனமாக தொடர்ந்து நிலைத்திருக்கும்.

மித்ரா ஒதுக்கீடுகளை மற்ற செயல்பாட்டு நிறுவனங்களுக்கு வழங்குவது, கொடுக்கப்பட்ட பொறுப்பில் இருந்து விலகுவது அல்ல.

மாறாக, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், அங்கீகரித்த நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு இயக்க முறையாகும் என்று தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெளிவுப்படுத்தினார்.

இன்று, மேலவையில் 2026-ஆம் ஆண்டு வரவு செலவு சட்ட மசோதாவின் விவாதத்தை நிறைவு செய்யும்போது ரமணன் அவ்வாறு கூறினார்.

இந்நாட்டில் இந்திய சமூகத்திற்கான மேம்பாட்டு ஒதுக்கீடு அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட 10 கோடி ரிங்கிட்டை மட்டும் உட்படுத்தியது இல்லை.

அனைத்து இனங்களுக்கும் பயனளிக்கும் வகையில் அமைச்சுகள் மற்றும் நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் பல்வேறு ஒதுக்கீடுகளும் அதில் அடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)